நிறுவனர்
தெய்வத்திரு.எம்.ஏ.குருசாமி - ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவர்களின் நினைவாக
&
NPR GROUP OF COLLEGES, Natham
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியருக்காக நடத்தும்
மாபெரும் கலைத்திறன் போட்டிகள் - 2013
· கவிதைப்போட்டி
· பேச்சுப்போட்டி
· ஓவியப்போட்டி
· பாட்டுப்போட்டி
· நடனப்போட்டி
போட்டிகளுக்கான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள்
ஒவ்வொரு பிரிவிலும் பள்ளி மாணவ - மாணவியருக்கென தனி போட்டிகளும், கல்லூரி மாணவ - மாணவியருக்கென தனி போட்டிகளும் நடத்தப்படும். எட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். அதாவது 4 -ம் வகுப்பு பயில்பவர் முதல் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். தவிர, போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிப்ரவரி 3 -ம் தேதி அச்யுதா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ’அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலைகளின் இன்னிசை மழை’ நிகழ்ச்சிக்கான ரூ.500 மதிப்புள்ள அனுமதி டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.
பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் விரும்பும் பட்சத்தில், வெற்றிபெறும் மாணவ - மாணவியருக்கு அடுத்த கட்ட வாய்ப்புகளையும் தேடித்தரத் தயாராக இருக்கிறோம். உள்ளூர்த் தொலைக்காட்சிகள் முதல் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் வரை அவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிக்காட்டவும், பிரபல பத்திரிகைகளில் தங்கள் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளவும், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் அவர்கள் பங்கேற்கவும் ஆவன செய்யப்படும்.
· பேச்சுப்போட்டி
போட்டியாளர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றினை கருப்பொருளாகக் கொண்டு பேச வேண்டும்.
பள்ளி மாணவ - மாணவியருக்கு
1. நான் விரும்பும் இந்தியா
2. வாழ நினைத்தால் வாழலாம்
3. நல்ல பெற்றோர் எப்படி இருக்க வேண்டும்
4. குடி, குடியைக் கெடுக்கும்
5. வாய்மையே வெல்லும்
6. புவியைக் காப்போம்
கல்லூரி மாணவ - மாணவியருக்கு
1. சிகரம் தொலைவில் இல்லை
2. இனிய உளவாக..
3. நினைப்பதும் நடப்பதும்..
4. புதியதோர் உலகம் செய்வோம்
5. தவமின்றிக் கிடைத்த வரம்
6. தீதும் நன்றும் பிறர் தர வாரா
27.1.2013 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் - எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் கட்டப் போட்டிகள் நடத்தப்படும். அதிகபட்சமாக 4 நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். 4 நிமிடங்களிக்கு மேல் பேசுவது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அது தேர்ச்சியைப் பாதிக்கும்.
மாணவர்களின் பேச்சுக்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் 28.1.2013 முதல் சூப்பர் டிவி-யில் ஒளிபரப்பப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நடுவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் 10 மாணவ - மாணவியரில் இருந்து 4 பேரை மட்டும் இறுதிக் கட்டப் போட்டிகளுக்காகத் தேர்வு செய்வார்கள் சிறப்பு நடுவர்கள்.
தேர்ச்சிபெறும் அந்த 4 பேரும், 3.2.2013 அன்று காலை 10.30 மணிக்கு அச்யுதா பள்ளி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இறுதிக் கட்டப் போட்டிகளில் பங்குபெற்று, மேடையேறிப் பேச அனுமதிக்கப்படுவர். பேசுவதற்கான தலைப்பினை அரை மணி நேரத்துக்கு முன்னரே நடுவர்கள் அரங்கில் அறிவிப்பார்கள். அதிகபட்சமாக 4 நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். 4 நிமிடங்களுக்கு மேல் பேசுவது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதன் பின்னர்.. மேடையில் வைக்கப்படும் மிகப்பெரிய ஒளித்திரையில் அவர்கள் பேசியது காணொலிக் காட்சியாக அவ்வப்போது ஒளிபரப்பப்படும். (தொடர்ச்சி.. அனைத்துப் போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள் கடைசிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.)
· ஓவியப் போட்டி
கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றினைக் கருப்பொருளாகக் கொண்டு ஓவியம் வரைய வேண்டும்.
பள்ளி மாணவ - மாணவியருக்கு
1. என் பள்ளி
2. என் வீடு
3. என் ஊர்
4. என் நாடு
5. என் உலகம்
6. என் கனவு
கல்லூரி மாணவ - மாணவியருக்கு
1. நாளைய உலகம்
2. இயற்கையின் அதிசயம்
3. மனிதரில் இத்தனை நிறங்களா
4. வண்ணக் கனவுகள்
5. அன்றும் இன்றும்
6. வானமெனும் போதிமரம்
27.1.2013 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் - எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் கட்டப் போட்டிகள் நடத்தப்படும். ஒரு மணி நேர கால அவகாசத்துக்குள் ஓவியம் வரைய வேண்டும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக்கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அது தேர்ச்சியைப் பாதிக்கும். போட்டிக்கான எழுதுதாள்கள் / வரைவதற்கான அட்டைகள் வழங்கப்படும். வரைவதற்கான வண்ணங்களையும் உபகரணங்களையும் மாணவர்களே கொண்டு வரவேண்டும்.
மாணவர்களின் ஓவியங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் 28.1.2013 முதல் சூப்பர் டிவி-யில் ஒளிபரப்பப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நடுவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் 10 மாணவ - மாணவியரில் இருந்து 4 பேரை மட்டும் இறுதிக் கட்டப் போட்டிகளுக்காகத் தேர்வு செய்வார்கள் சிறப்பு நடுவர்கள்.
தேர்ச்சிபெறும் அந்த 4 பேரும், 3.2.2013 அன்று காலை 10.30 மணிக்கு அச்யுதா பள்ளி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இறுதிக் கட்டப் போட்டிகளில் பங்குபெற்று, மேடையேறி, ஓவியம் வரைய அனுமதிக்கப்படுவர். ஓவியத்துக்கான தலைப்பினை அரை மணி நேரத்துக்கு முன்னரே நடுவர்கள் அரங்கில் அறிவிப்பார்கள். அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்குள் ஓவியத்தை வரைந்தாக வேண்டும். 30 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். போட்டிக்கான எழுதுதாள்கள் / வரைவதற்கான அட்டைகள் அரங்கில் வழங்கப்படும். வரைவதற்கான வண்ணங்களையும் உபகரணங்களையும் மாணவர்களே கொண்டு வரவேண்டும்.
அதன் பின்னர்.. மேடையில் வைக்கப்படும் மிகப்பெரிய ஒளித்திரையில் அவர்களது ஓவியங்கள் காணொலிக் காட்சியாகளில் அவ்வப்போது ஒளிபரப்பப்படும். (தொடர்ச்சி.. அனைத்துப் போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள் கடைசிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.)
· பாட்டுப் போட்டி
எந்தப் பாடலைப் பாடுவதென்பது மாணவ - மாணவியர் விருப்பத்துக்கே விடப்படுகிறது. திரைப்படப் பாடல் அல்லது தனிப்பாடலினை அவர்களே தேர்வு செய்துகொள்ளலாம்.
27.1.2013 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் - எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் கட்டப் போட்டிகள் நடத்தப்படும். கொடுக்கப்படும் நேரம் : அதிகபட்சமாக 4 நிமிடங்கள் மட்டுமே. 4 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அது தேர்ச்சியைப் பாதிக்கும்.
மாணவர்கள் பாடுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் 28.1.2013 முதல் சூப்பர் டிவி-யில் ஒளிபரப்பப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நடுவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் 10 மாணவ - மாணவியரில் இருந்து 4 பேரை மட்டும் இறுதிக் கட்டப் போட்டிகளுக்காகத் தேர்வு செய்வார்கள் சிறப்பு நடுவர்கள்.
தேர்ச்சிபெறும் அந்த 4 பேரும், 3.2.2013 அன்று காலை 10.30 மணிக்கு அச்யுதா பள்ளி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இறுதிக் கட்ட போட்டிகளில் பங்குபெற்று, மேடையேறிப் பாட அனுமதிக்கப்படுவர். பாடலினை நடுவர்களுடன் கலந்தாலோசித்துப் பின்னர் நடுவர்கள் விருப்பத்திற்கேற்ப பாடவேண்டும். ஆனால், அதிகபட்சமாக 4 நிமிடங்களுக்குள் பாடி முடித்துக் கொள்ள வேண்டும். 4 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதன் பின்னர்.. மேடையில் வைக்கப்படும் மிகப்பெரிய ஒளித்திரையில் அவர்கள் பாடியது காணொலிக் காட்சியாக அவ்வப்போது ஒளிபரப்பப்படும். . (தொடர்ச்சி.. அனைத்துப் போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள் கடைசிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.)
· நடனப் போட்டி
எந்தப் பாடலுக்கு / இசைக்கு நடனமாடுவதென்பது மாணவர்கள் விருப்பத்துக்கே விடப்படுகிறது. திரைப்படப் பாடல் அல்லது தனிப்பாடல் இசையினை அவர்களே தேர்வு செய்துகொண்டு நடனமாடலாம். ஆனால், குறுந்தகட்டினை (சிடி / டிவிடி) அவர்களே கொண்டுவர வேண்டும்.
27.1.2013 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் - எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் கட்டப் போட்டிகள் நடத்தப்படும். கொடுக்கப்படும் நேரம் : அதிகபட்சமாக 4 நிமிடங்கள் மட்டுமே. 4 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அது தேர்ச்சியைப் பாதிக்கும். குழு நடனத்துக்கு அனுமதி கிடையாது.
மாணவர்கள் நடனமாடுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் 28.1.2013 முதல் சூப்பர் டிவி-யில் ஒளிபரப்பப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நடுவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் 10 மாணவ - மாணவியரில் இருந்து 4 பேரை மட்டும் இறுதிக் கட்டப் போட்டிகளுக்காகத் தேர்வு செய்வார்கள் சிறப்பு நடுவர்கள்.
தேர்ச்சிபெறும் அந்த 4 பேரும், 3.2.2013 அன்று காலை 10.30 மணிக்கு அச்யுதா பள்ளி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இறுதிக் கட்ட போட்டிகளில் பங்குபெற்று, மேடையேறி நடனமாட அனுமதிக்கப்படுவர். பின்னணிப் பாடல் / இசையினை நடுவர்களுடன் கலந்தாலோசித்துப் பின்னர் நடுவர்கள் விருப்பத்திற்கேற்ப நடனமாடவேண்டும். ஆனால், அதிகபட்சமாக 4 நிமிடங்களுக்குள் ஆடி முடித்துக் கொள்ள வேண்டும். 4 நிமிடங்களுக்கும் மேல் எடுத்துக்கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதன் பின்னர்.. மேடையில் வைக்கப்படும் மிகப்பெரிய ஒளித்திரையில் அந்த அவர்கள் நடனமாடியது காணொலிக் காட்சியாக அவ்வப்போது ஒளிபரப்பப்படும். (தொடர்ச்சி.. அனைத்துப் போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள் கடைசிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.)
· கவிதைப்போட்டி
கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றினை கருப்பொருளாகக் கொண்டு கவிதை படைக்க வேண்டும் போட்டியாளர்கள்.
பள்ளி மாணவ - மாணவியருக்கு
1. மழலை
2. காட்டுக்குள்ளே
3. தமிழமுதம்
4. இயற்கை
5. அம்மா
6. நல்ல நேரம்
கல்லூரி மாணவ - மாணவியருக்கு
1. உறவுகள் தொடர்கதை
2. இளைய பாரதம்
3. பாதை தெரியுது பார்
4. உரிமைச் செம்பயிர்
5. நான் தேடும் நந்தவனம்
6. சின்னஞ்சிறு உலகம்
27.1.2013 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் - எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் கட்டப் போட்டிகள் நடத்தப்படும். அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்குள் கவிதை எழுதி முடிக்க வேண்டும். 30 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அது தேர்ச்சியைப் பாதிக்கும்.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதைகளை எழுதியவர்களுக்கு அரங்கில் அரை மணி நேரத்துக்கு முன்னதாக புதிய தலைப்பு கொடுக்கப்படும். அடுத்த அரை மணி நேரத்துக்குள் அதற்கான கவிதை படைத்து, மேடையில் வாசிக்க வேண்டும்.
மாணவர்கள் கவிதை படிப்பது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் 28.1.2013 முதல் சூப்பர் டிவி-யில் அவை ஒளிபரப்பப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நடுவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் 10 மாணவ - மாணவியரில் இருந்து 4 பேரை மட்டும் இறுதிக் கட்டப் போட்டிகளுக்காகத் தேர்வு செய்வார்கள் சிறப்பு நடுவர்கள்.
தேர்ச்சிபெறும் அந்த 4 பேரும், 3.2.2013 அன்று காலை 10.30 மணிக்கு அச்யுதா பள்ளி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இறுதிக் கட்ட போட்டியில் பங்கு பெற்று, கவிதை படைப்பார்கள். கவிதைக்கான தலைப்பினை அரை மணி நேரத்துக்கு முன்னரே நடுவர்கள் அரங்கில் அறிவிப்பார்கள். அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்குள் கவிதை எழுதி, அதை 4 நிமிடங்களுக்குள் மேடையில் படிக்க வேண்டும். 4 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது, விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதன் பின்னர்.. மேடையில் வைக்கப்படும் மிகப்பெரிய ஒளித்திரையில் அவர்கள் கவிதை பாடியது காணொலிக் காட்சியாக அவ்வப்போது ஒளிபரப்பப்படும். (தொடர்ச்சி.. அனைத்துப் போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள் கடைசிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.)
· அனைத்து போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள்
முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய வெற்றியாளர்கள் அரங்கிலிருக்கும் பார்வையாளர்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மூலம் வரிசைப்படுத்துவார்கள். அதற்கென தனியாக வாக்குச் சீட்டு அரங்கத்தில் நுழையும்போதே பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
மாலை 6 மணி அளவில் ஆரம்பிக்கும் ’அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலைகளின் இன்னிசை மழை’ நிகழ்ச்சியின் இடையே, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்னிலையில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் உடனடியாகத் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் : 74020 77789, 98421 11150, 98421 42039.
பதிவுக் கட்டணம் ரூ.25. போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் பெறும்போதே பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி, பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவரின் பெயருடன் பதிவு எண்ணையும் குறிப்பிட்டே விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் பெயர் மாற்றத்தக்கதல்ல.
பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் சார்பாக முன்கூட்டியே விண்ணப்பங்களைப் பெறவிரும்பினால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்கும்போது பதிவுக் கட்டணம் செலுத்தி, உரிய பதிவு எண்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை
SUPERtvSUPERtainment.blogspot.com என்ற இணையதளத்தில் இருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை. கொடுக்கும்போது பதிவுக்கட்டணம் செலுத்தி, பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.
போட்டிகளுக்கான நெறியாளர்கள் : தமிழ்ப்பெரியசாமி, கவிஞர் கதிரவன், ஊடகவியலாளர் ஜி.கௌதம்.
போட்டிகளுக்கான சிறப்பு நடுவர்கள் : அபஸ்வரம் ராம்ஜி, கவிஞர் பழனிபாரதி, ஓவியர் அரஸ், கலைமாமணி ஷோபனா ரமேஷ், பின்னணிப்பாடகர் சின்மயி, ஊடகவியலாளர் கவிதா கணேஷ்.
போட்டி தொடர்பாக எந்தவிதமான கடிதப்போக்குவரத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஒரே மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொள்ள ஆட்சேபணை இல்லை. போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறுமானால் நெறியாளர்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்து நேர நிர்வாகத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் தங்கள் பள்ளி / கல்லூரி அடையாள அட்டையைக் கட்டாயம் எடுத்துக் கொண்டுவர வேண்டும்.
போட்டிகள் நடத்தப்படும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே அரங்குக்கு வந்து, பதிவுகூப்பனைக் காட்டி வருகையினை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. நிர்வாக வசதிக்கேற்ப விதிமுறைகள் மாற்றம் செய்யப்படலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியருக்கு ’அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலைகளின் இன்னிசை மழை’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான சிறப்பு அனுமதி டிக்கெட் (ரூ. 500 மதிப்புள்ள) இலவசமாக வழங்கப்படும். ஒருவரே பல போட்டிகளில் கலந்து கொண்டாலும், அனுமதி டிக்கெட் ஒன்று மட்டுமே வழங்கப்படும்.
குறிப்பு : திறமையும் தகுதியும் கொண்ட மழலை மேதைகளைக் கண்டெடுத்து, அவர்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து, அவர்களைத் தொழில் ரீதியான (PROFESSIONAL) பாடகர்களாக்கி, இசை மழலைகள் குழுவினை நடத்திவருகிறார் திரு. அபஸ்வரம் ராம்ஜி. 2000 -ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இசை மழலைகள் குழு, இதுவரை ஆயிரக்கணக்கான மேடைகள் கண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பாடிக் கலக்கி வருகிறார்கள் இசை மழலைகள். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட அத்தனை இசையமைப்பாளர்களின் இசையிலும், எண்ணற்ற திரைப்படப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ஆஸ்கர் பரிசை ரஹ்மானுக்கு வாங்கித்தந்த ‘ஜெய்ஹோ’ விலும் இசைமழலைகளின் குரல் ஒலித்திருக்கிறது.
போட்டிகளுக்கான விண்ணப்பம் பெறவும் விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் கூடுதல் விவரங்களுக்கும் :
ஜி.கௌதம் - 74020 77789,
ஜி.ரமேஷ் முரளி - 98421 42039
ஜி.பாலாஜி - 98421 11150
சூப்பர்டெயின்மெண்ட், சூப்பர் டிவி, நான்காவது தெரு, பாண்டியன் நகர்,
திண்டுக்கல் - 624 001.